திருட்டு இணையத்தில் விஜய் சேதுபதி படம்

திருட்டு இணையத்தில் விஜய் சேதுபதியின் படமும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-04-29 05:13 GMT
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியான உடனேயே திருட்டு இணைய தளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தின. ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களையும் பிரதி எடுத்து இணைய தளங்களில் வெளியிட்டனர். 

சமீபத்தில் திரைக்கு வந்த பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2 படங்களும் இணைய தளங்களில் வெளியானது. இந்த நிலையில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் திருட்டு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. 

படம் தியேட்டர்களில் வெளியான சில மணி நேரத்தில் முழு படமும் இணைய தளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்