ஓ.டி.டி.யில் வரும் மோகன்லால் படம்
மோகன்லால் மலையாளத்தில் நடித்துள்ள ‘டுவொல்த் மேன்’ படமும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது.
தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி, மலையாள படங்கள் தொடர்ந்து ஓ.டி.டி.யில் வெளியாகி வருகின்றன. மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2-ம் பாகம் ஓ.டி.டி.யில் வந்தது. நிவின் பாலி நடித்த கனகம் காமினி கலகம் மற்றும் லவ், சாஜன் பேக்கரி, படமும் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதாக அறிவித்ததும், அவரது படங்களுக்கு தியேட்டர் அதிபர்கள் தடை விதித்தனர். பின்னர், துல்கர் சல்மான் அளித்த விளக்கத்தை ஏற்று தடையை நீக்கினர். டோவினோ தாமஸ் நடித்துள்ள மின்னல் முரளி படமும் ஓ.டி.டி.யில் வெளியானது. இந்நிலையில், மோகன்லால் மலையாளத்தில் நடித்துள்ள ‘டுவொல்த் மேன்’ படமும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது.
பெரிய தொகை கொடுத்து, ஓ.டி.டி. நிறுவனம் இந்த படத்தை வாங்கி இருக்கிறது. ரீலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர். இது திகில் படமாக தயாராகி உள்ளது. மோகன்லாலுடன் உன்னி முகுந்தன், அனுஸ்ரீ, ஷிவ்தா, அனுசித்தாரா, பிரியங்கா நாயர் ஆகியோரும் நடித்துள்ளனர்.