"தி வாரியர்" படத்தின் புல்லட் பாடலை தமிழ், தெலுங்கில் பாடிய சிலம்பரசன்
சிலம்பரசன் பாடியுள்ள புல்லட் பாடல் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
சென்னை,
சிலம்பரசன் பாடியுள்ள புல்லட் பாடல் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ராம் பொத்தினேனியை வைத்து "தி வாரியர்" என்ற படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார்.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, படத்தில் இடம்பெற்ற புல்லட் பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சிலம்பரசனே பாடி அசத்தியுள்ளார்.