கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் டீசர் வெளியீடு..!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணிக் காயிதம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Update: 2022-04-22 10:48 GMT
சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் 'சாணிக் காயிதம்'. இந்த திரைப்படத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சாணிக் காயிதம் திரைப்படம் ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 80-களின் காலக்கட்டத்தின் பிண்ணனியில் நடக்கும் கிரைம் திரில்லராக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. சாணிக் காயிதம் திரைப்படம் வருகிற மே மாதம் 6-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்