இணையத்தில் கசிந்த தனுஷ் பட காட்சிகள்

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள், இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-04-20 11:39 GMT
இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். நாயகிகளாக நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை திருட்டுத்தனமாக யாரோ செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

அந்த வீடியோவில் திருவிழாவில் தனுசும், நித்யாமேனனும் நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பட காட்சிகளை வெளியிட்டது யார் என்று படக்குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனுஷ் நானே வருவேன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்