மீண்டும் நடிக்கும் நஸ்ரியா

8 வருடங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் புதிய படத்தில் நஸ்ரியா நடிக்கிறார்.

Update: 2022-04-20 11:11 GMT
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்த நஸ்ரியா, வளர்ந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக 2014-ல் வெளியான திருமணம் எனும் நிக்கா தமிழ் படத்தில் நடித்து இருந்தார். நஸ்ரியாவுக்கு தமிழ், மலையாள பட உலகில் நிறைய ரசிகர்கள் சேர்ந்தனர்.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை நஸ்ரியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் இருந்தும் விலகினார்.

8 வருடங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் புதிய படத்தில் நஸ்ரியா நடிக்கிறார். இந்த படத்துக்கு அடடே சுந்தரா என்று பெயர் வைத்துள்ளனர். இதில் நாயகனாக நானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. நானி ஏற்கனவே வெப்பம், நான் ஈ ஆகிய தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராகவும் இருக்கிறார்.

மேலும் செய்திகள்