'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்

ரசிகர்கள் மத்தியில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Update: 2022-04-15 18:46 GMT

நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’ . இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக நடிகர் சிம்பு அவருடைய டுவிட்டர் பக்கத்தில்   அறிவித்துள்ளார். 


மேலும் செய்திகள்