அஜித் பிறந்தநாளில் ஏ.கே. 61 பர்ஸ்ட் லுக்?

நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-04-12 13:07 GMT
கோப்புப்படம்

சென்னை, 

நடிகர் அஜித் கடைசியாக வலிமை படம் நடித்துள்ள நிலையில், தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த் படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து படம் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அஜித் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரின் பிறந்த நாளான மே 1  ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்