தனுசுக்கு ஜோடியான சுவீடன் நடிகை மகிழ்ச்சி

நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என சுவீடன் நடிகை எல்லி அவ்ரம் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-04-12 09:12 GMT
தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதனால், நானே வருவேன் படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நானே வருவேன் படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக, சுவீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரமை தேர்வு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. ஆனாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பதை எல்லி அவ்ரம் உறுதிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பில் தனுசுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட எல்லி அவ்ரம், “நானே வருவேன் படத்தில் நான் நடித்த காட்சிகள் முடிந்துவிட்டன. திறமையான நடிகர் தனுஷ், புத்திசாலித்தனமான இயக்குனர் செல்வராகவன் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது’’ என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்