ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

ஹன்சிகா நடிக்கும் 'ரவுடி பேபி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2022-04-09 06:43 GMT
கோப்புப் படம்
சென்னை,

நடிகை ஹன்சிகா தற்போது அறிமுக இயக்குனர் ஜே.எம் ராஜா சரவணன் இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ரவுடி பேபி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். செல்லதுரை ஒளிப்பதிவு செய்கிறார்.

ரவுடி பேபி படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து சத்யராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, ஜான் கோக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

ஹன்சிகா தற்போது 'பாட்னர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் நடித்துள்ள 'மஹா' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ளது. அடுத்ததாக பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்