வடசென்னையில் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது
வடசென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கருவாக வைத்து, ‘போலாமா ஊர்கோலம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.
இதில் கதாநாயகனாக நடிப்பதுடன், ‘கிரவுட் பண்டிங்’ எனப்படும் கூட்டு நிதி பங்களிப்பு முறையில் படத்தை தயாரிக்கிறார், பிரபுஜித்.
‘பெரிசு’ படத்தில் நடித்த மதுசூதன், இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க , சக்தி மகேந்திரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மாநில மற்றும் தேசிய அளவில் புகழ் பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் படத்தில் நடித்துள்ளனர். நாகராஜ் பாய் துரைலிங்கம் டைரக்டு செய்கிறார்.