காஜல் அகர்வாலுக்கு இப்போது தேவை, அதுதான்

நீங்கள் உங்கள் உடல்நலத்தை கவனித்து கொள்ளுங்கள். இப்போதைய தேவை அதுதான்'’, என்று காஜல் அகர்வாலுக்கு, ராம்சரண் அன்பு கட்டளை பிறப்பித்துள்ளார்.

Update: 2022-04-08 10:32 GMT
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர், காஜல்அகர்வால். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் நடிப்பதை நிறுத்தியுள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘ஹே சினாமிகா’ படம் வெளியாகி இருந்தது.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன், காஜல் அகர்வால் இணைந்து நடித்த ‘ஆச்சார்யா ’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்துக்கான முன்னோட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சிரஞ்சீவி, ராம்சரண், காஜல்அகர்வால், பூஜா ஹெக்டே உள்பட படத்தில் நடித்த முக்கிய நடிகர்-நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காஜல் அகர்வாலும் இதில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் சூழலில்``படவிளம்பர பணிக்கு நீங்கள் சிரமத்தை எதிர்கொண்டு வரவேண்டாம். உடல்நலத்தை கவனித்து கொள்ளுங்கள். இப்போதைய தேவை அதுதான்'’, என்று காஜல் அகர்வாலுக்கு, ராம்சரண் அன்பு கட்டளை பிறப்பித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட காஜல் அகர்வால் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்