மீண்டும் நடிக்க வந்த மாளவிகா

மாளவிகா மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். 12 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு மாளவிகா புதிய படத்தில் நடிக்கிறார்.

Update: 2022-04-05 09:42 GMT
தமிழில் அஜித்குமார் ஜோடியாக உன்னைத்தேடி படத்தில் அறிமுகமான மாளவிகா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ஆனந்த பூங்காற்றே, வெற்றிகொடி கட்டு, பேரழகன், வசூல் ராஜா, திருட்டுப்பயலே உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ஆகிய பாடல்களில் மாளவிகாவின் நடனம் பெரிய அளவில் பேசப்பட்டது. 2008-ல் ஆயுதம் செய்வோம் படத்தில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க மாளவிகாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், சுந்தர்.சி படத்தில் நடிக்க மாளவிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் மாளவிகா பங்கேற்று நடித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜீவா, ஶ்ரீகாந்த், ஜெய் ஆகிய 3 பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மாளவிகாவுக்கு மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.

மேலும் செய்திகள்