ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2022-04-04 17:37 GMT
சென்னை,

நடிகர் ஆர்யா தற்போது 'கேப்டன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்