நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் 2 புதிய படங்கள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்காவுக்கு 2 புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.
அனுஷ்கா நடித்து கடைசியாக சைலன்ஸ் படம் வெளியானது. அதன்பிறகு, உடல் எடை கூடியதால் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. முன்னணி கதாநாயகர்கள் அனுஷ்காவை ஒதுக்கி விட்டு இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தனர். இதனால், அனுஷ்கா 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு தற்போது 2 புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.
அதில் ஒரு படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் போலீ ஷெட்டியுடன் இணைந்து நடிக்கிறார். இதில் அனுஷ்கா இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது.
அடுத்து பிரபாஸ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். மாருதி இயக்குகிறார். ஏற்கனவே பாகுபலி, பில்லா, மிர்சி ஆகிய படங்களில் அனுஷ்காவும் பிரபாசும் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.