2 பாகங்களாக வரும் பிரபாசின் ‘ஆதிபுருஷ்’

ஆதிபுருஷ் படம் திரைக்கு வந்ததும் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-31 08:50 GMT
பிரபாசின் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்துக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் எகிறியது. சம்பளமும் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஈட்டவில்லை. தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்த படம் தயராகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். ஓம் ராவத் இயக்குகிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியிட உள்ளனர். 

இந்த நிலையில் ஆதிபுருஷ் படம் திரைக்கு வந்ததும் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபாசுடன் இயக்குனர் ஓம் ராவத் இதுகுறித்து பேசியதாகவும், 2-ம் பாகத்திலும் நடிக்க பிரபாஸ் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்