ரெஜினா அழகை புகழும் ரசிகர்கள்

ரெஜினா தனது டுவிட்டர் பக்கத்தில் நீச்சல் குளத்தில் சூரிய குளியல், சைக்கிள் பயணம் போவது, மரங்களில் ஏறுவது, கவர்ச்சி கவுன் அணிந்து கலக்கல் போஸ் தருவது போன்ற தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Update: 2022-03-27 09:14 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்', ‘அழகிய அசுரா', ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', ‘மாநகரம்', ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்', ‘நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை ‘டுவிட்டர்' பக்கத்தில் வெளியிடுவதை அவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நீச்சல் குளத்தில் சூரிய குளியல், சைக்கிள் பயணம் போவது, மரங்களில் ஏறுவது, கவர்ச்சி கவுன் அணிந்து கலக்கல் ‘போஸ்' தருவது போன்ற தனது புகைப்படங்களை அவர் ‘டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படங்களுக்கு ரசிகர்களின் பாராட்டு குவிந்து வருகிறது. ரெஜினாவின் அழகை பலவாறு புகழ்ந்து வருகிறார்கள்.

ரெஜினா தற்போது 2 தமிழ் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்