ரூ.12 லட்சம் மாத வாடகை வீட்டில் மாதுரி தீட்சித்
மாதுரி தீட்சித் மும்பையில் புதிய வாடகை வீட்டில் தற்போது குடியேறி இருக்கிறார். இந்த வீட்டின் மாத வாடகை ரூ.12 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி திரையுலகில் 1990-களில் புகழ் பெற்ற முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மாதுரி தீட்சித். நடனத்திலும் திறமை காட்டினார். தேஜாப், கல்நாயக், சாஜன், பேட்டா, ஹம் ஆப்கே ஹைன் கவுன், தேவதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்தியாவின் பிரபல ஓவியரான எம்.எல்.ஹுசேன் மாதுரி தீட்சித்தின் நடிப்பை பாராட்டி ஓவியங்கள் வரைந்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய மாதுரி தீட்சித்துக்கு மத்திய அரசு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
இந்த நிலையில் மாதுரி தீட்சித் மும்பையில் புதிய வாடகை வீட்டில் தற்போது குடியேறி இருக்கிறார். இந்த வீட்டின் மாத வாடகை ரூ.12 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீடு உயரமான கட்டிடத்தின் 29-வது மாடியில் அமைந்துள்ளது. வீட்டின் பரப்பளவு 5 ஆயிரத்து 550 சதுர அடி. வீட்டில் இருந்து இரவு நேர ஒளி வெள்ளத்தில் மும்பை நகரின் அழகை ரசிக்க முடியும். பகலில் எல்லா திசைகளில் இருந்தும் வெளிச்சம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரூ.12 லட்சம் மாத வாடகை வீட்டில் குடியேறிய மாதுரி தீட்சித்துக்கு எதிராக வலைத்தளத்தில் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.