படம் தோல்வி அடைந்ததால் ரூ.50 கோடியை திருப்பி கொடுத்த பிரபாஸ்

நடித்த ராதே ஷியாம் படம் பெரிய தோல்வியை சந்தித்ததாக கூறப்பட்டது. இதனால் நடிகர் பிரபாஸ் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-03-22 11:24 GMT
பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இவரது படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர்.

பிரபாஸ், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்த ராதே ஷியாம் படம் சமீபத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. இதனால் படம் வெளியான நாளில் தியேட்டர்களில் அதிக கூட்டம் திரண்டது. ஆனால் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்றும், காட்சிகள் மெதுவாக நகர்கின்றன என்றும் விமர்சனங்கள் கிளம்பியதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது. இதனால் ராதே ஷியாம் படம் வசூல் அளவில் பெரிய தோல்வியை சந்தித்ததாக கூறப்பட்டது. தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக திரையுலகினர் பேசினர். இதையடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட பிரபாஸ் ராதே ஷியாம் படத்துக்காக வாங்கிய ரூ.100 கோடி சம்பளத்தில் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்