2 கோடி பார்வையாளர்களை கடந்த பீஸ்ட் படத்தின் "ஜாலியோ ஜிம்கானா" பாடல்..!!
யூடியூப்பில் இந்த பாடலை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான 'அரபிக்குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,யூடியூப்பில் சாதனையும் படைத்தது .
அதனை தொடர்ந்து அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. யூடியூப்பில் இந்த பாடல் தற்போது 2 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடலை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு இன்று காலை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.