ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் 'வீட்ல விசேஷம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-19 06:16 GMT
சென்னை,

'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள திரைப்படம் 'வீட்ல விசேஷம்'. இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற முழுநீள காமெடி திரைப்படமான 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி உள்ளது இந்த திரைப்படம். 

இந்த திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இணைந்து இயக்குகின்றனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 'வீட்ல விசேஷம் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்