ஒரு நாவல், திரைக்கதை ஆனது
பார்த்திபன் - கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த படம், 'யுத்தசத்தம்'. இந்தப் படத்தை எழில் இயக்கிருக்கிறார்.
‘துள்ளாத மனமும் துள்ளும்', ‘பெண்ணின் மனதை தொட்டு', ‘பூவெல்லாம் உன் வாசம்', ‘மனம் கொத்திப் பறவை', ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' உள்பட பல படங்களை இயக்கியுள்ள எழில், தனது படங்களில் காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.
அதில் இருந்து மாறுபட்டு வேறு மாதிரி ‘யுத்தசத்தம்' படத்தை இயக்கியிருக்கிறார். ராஜேஷ்குமார் எழுதிய நாவலை திரைக் கதையாக்கி இருக்கிறார். படத்தின் உச்சகட்டக் காட்சியை மட்டும் 7 நாட்கள் படமாக்கி இருக்கிறார்கள். இத்துடன் படப் பிடிப்பு முடிவடைந்தது.