10 படங்களில் ஜோடியாக நடித்த சிவாஜி-வாணிஸ்ரீ

சிவாஜியும், வாணிஸ்ரீயும் 10 படங்களில் ஜோடியாக நடித்து இருந்தார்கள்.

Update: 2022-03-18 07:56 GMT
‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் மறைந்து விட்டாலும், அவர் நடித்த படங்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய வெற்றிப் படங்களில், ‘வசந்த மாளிகை’யும் ஒன்று. அதில் அவருக்கு ஜோடி, வாணிஸ்ரீ.

சிவாஜியும், வாணிஸ்ரீயும் 11 படங்களில் இணைந்து நடித்தார்கள். அதில் 10 படங்களில் ஜோடியாக நடித்து இருந்தார்கள்.

‘குலமா குணமா’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் வாணிஸ்ரீ, சிவாஜியுடன் ஜோடி சேரவில்லை. ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

அந்தப் படம், அண்ணன்-தம்பி கதை. சிவாஜி அண்ணனாகவும், ஜெய்சங்கர் தம்பியாகவும் நடித்து இருந்தார்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

மேலும் செய்திகள்