மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி படம் வெளியானது!
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' திரைப்படம் அவருடைய பிறந்தநாளில் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக புனித் ராஜ்குமார் ஜேம்ஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் தான் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படம் பல திரையரங்குகளில் அவருடைய பிறந்தநாளான இன்று 17-ஆம் தேதி வெளியாகி உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கண்ணீர் மல்க கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் இவரின் பிறந்தநாளை ரசிகர்கள், திரைதுறையினர் என பலரும் புனித் ராஜ்குமாரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.