வில்லனாக பிரேம்ஜி

சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கில் தயாராகி வரும் படத்தில் வில்லனாக பிரேம்ஜி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-17 11:26 GMT
தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் பிரேம்ஜி. சென்னை 28 படத்தில் நடித்து பிரபலமான பிரேம்ஜிக்கு அதிக பட வாய்ப்புகள் வந்தன. கோவா, சரோஜா, பிரியாணி, மாநாடு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கில் தயாராகி வரும் படத்தில் நடிக்க பிரேம்ஜியை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரேம்ஜி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முழுக்க நகைச்சுவை படமாக தயாராவதாகவும் இதில் சிவகார்த்திகேயேனுக்கு தொல்லை கொடுக்கும் எதிர்மறை கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

படத்தில் கதாநாயகிகளாக ராஷி கன்னா, உக்ரைன் நடிகை மரியா ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படத்தை அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தை தமிழிலும் வெளியிடுகின்றனர்.

மேலும் செய்திகள்