நயன்தாரா படத்தில் சல்மான் கான்
நயன்தாரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகர் சல்மான்கானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மலையாளத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற லூசிபர் படம் தெலுங்கில் காட் பாதர் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சு வாரியர் வேடத்தில் நயன்தாராவும், விவேக் ஓபராய் வேடத்தில் பிஜுமேனனும் நடிக்கின்றனர்.
நாசர், சத்யதேவ், ஹரீஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் மற்றும் தாதாக்கள் மோதல் கதையம்சத்தில் படம் தயாராகிறது. படத்தை மோகன்ராஜா இயக்குகிறார்.
இந்நிலையில், காட்பாதர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகர் சல்மான்கானை ஒப்பந்தம் செய்துள்ளனர். சல்மான்கான் கதாபாத்திரம் படத்துக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
தற்போது படப்பிடிப்பில் சல்மான்கான் இணைந்துள்ளார். நயன்தாரா படத்தில் சல்மான்கான் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடிக்கும் காட்சிகள் மும்பை புறநகர் பகுதியில் அரங்கு அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது.
சல்மான்கானை வரவேற்று சிரஞ்சீவி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களுடன் நீங்கள் நடிப்பது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. உங்களுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி’’ என்று கூறியுள்ளார்.