உன்னை மேடையில் சந்திக்கிறேன் தேவி ஸ்ரீ பிரசாத் : பதிலளித்த இளையராஜா

சென்னையில் வருகிற 18-ஆம் தேதி 'ராக் வித் ராஜா' என்ற இசைக்கச்சேரி நடக்கவுள்ளது

Update: 2022-03-17 00:55 GMT

இசைஞானி இளையராஜாவின் இசை இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். 

இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசை கச்சேரிகளை பல நாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம், இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.


இந்நிலையில் சென்னையில் வருகிற 18-ஆம் தேதி 'ராக் வித் ராஜா' என்ற இசைக்கச்சேரி நடக்கவுள்ளது. இதில் இளையராஜாவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்களை பாடவுள்ளனர். இந்த நெகிழ்வான தருணத்தை வெளிப்படுத்தும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத் "எனது கனவு நனவாகப் போகிறது" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். 

இதற்கு இளையராஜா அவருக்கு பதிலளித்துள்ளார் அந்த பதிவில் ;

 "உன்னை மேடையில் சந்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்