விஷ்ணு விஷால் நடித்துள்ள 'மோகன்தாஸ்' படத்தின் டீசர் வெளியானது..!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'மோகன்தாஸ்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-16 14:58 GMT
சென்னை,

சமீபத்தில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளியான 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் 'மோகன் தாஸ்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 

மோகன் தாஸ் திரைப்படத்தை 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'மோகன் தாஸ்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

மேலும் செய்திகள்