பூஜா ஹெக்டேவுக்கு பக்கபலமாக இருந்தவர்கள்

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் தான் ராதே ஷ்யாம். படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

Update: 2022-03-13 08:51 GMT
‘பாகுபலி’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகர் ஆகிவிட்டார் பிரபாஸ். தற்போது அவரது நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’ திரைக்கு வந்துள்ளது. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

இந்த படம் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் அழகு பதுமையாக வரும் பூஜா ஹெக்டே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். அவர் தனது மேக்கப் குழுவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-

‘‘எனது அழகான குழுவுக்கு... ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மேக்கப் கலைஞர்களுக்கு எனது மாபெரும் நன்றி. தினமும் படப்பிடிப்பு தளத்தில் நேர்மறை ஆற்றலை செட்டில் கொண்டு வந்ததற்கு... ஒவ்வொரு நாளும் எனக்கு ஆதரவாக இருந்ததற்கு... சோர்வடையும் நாட்களில் எனக்கு பக்கபலமாக இருந்ததற்கு நன்றி. என் சிரிப்புக்கும், என் சக்திக்கும் காரணம் நீங்கள். என்னை கவனித்து கொண்டதற்கு நன்றி. படத்தின் ‘ரிசல்ட்’ எதுவாக இருந்தாலும், நீங்கள் எனக்கு செய்த அனைத்துக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்’’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்