எப்போதும்போல் மகளிர் தினத்திலும் மதிக்கிறேன் பெண்ணே! - கவிஞர் வைரமுத்து டுவீட்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை,
மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எல்லோரும் மகளிர் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துவரும் நிலையில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில்,
கடவுளாக்கி
ஒதுக்குவதுமில்லை
அடிமையாக்கி
அடக்குவதுமில்லை
சில நேரங்களில்
ஆணினும் மேலானவள்
மற்றபடி நிகரானவள்
உன் தியாகத்தை -
திண்மையை -
கற்றுக்கொள்ளாமலே
கழிகிறது ஆண்கூட்டம்
நீ இல்லையேல்
ஈர்ப்புமில்லை;
காப்புமில்லை
எப்போதும்போல்
மகளிர் தினத்திலும்
மதிக்கிறேன் பெண்ணே!
என பதிவிட்டுள்ளார்.