கொடைக்கானல்-மைசூர் காடுகளில் படப்பிடிப்பு: கார்த்தி - மித்ரன் கூட்டணியில், ‘சர்தார்’
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான கார்த்தி, இப்போது, ‘சர்தார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் டைரக்டு செய்கிறார். இவர், ‘ஹீரோ’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களை இயக்கியவர். ‘சர்தார்’ படப் பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து கொடைக்கானல், மைசூர் காடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அங்கு சண்டை காட்சிகளை படமாக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார். குடும்பங்களை கவரும் ஜனரஞ்சகப் படமாக ‘சர்தார்’ தயாராகி வருகிறது. இதுபற்றி டைரக்டர் மித்ரன் கூறுகிறார்:-
‘‘இந்தப் படத்தில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராசிகன்னா நடிக் கிறார். சிம்ரன், சங்கி பாண்டே, முனீஷ்காந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். எஸ்.லட்சுமன் குமார் தயாரிக்கிறார்.’’