தமிழில் படவாய்ப்புகளை இழந்த கீர்த்தி சுரேஷ்

புதிய தமிழ் படங்கள் எதிலும் இதுவரை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகவில்லை. தற்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Update: 2022-02-26 08:51 GMT
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் அந்தஸ்து உயர்ந்தது. பட வாய்ப்புகளும் குவிந்தன. ஆனாலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பென்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி ஆகிய படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

தமிழில் செல்வராகவனுடன் சாணி காகிதம் படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துள்ளார். தமிழில் அவருக்கு வேறு படங்கள் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகிறார். மகேஷ்பாபு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அடுத்து நானி ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். போலோ ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார். இந்த மூன்று தெலுங்கு படங்களும் இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

புதிய தமிழ் படங்கள் எதிலும் இதுவரை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகவில்லை. தற்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்