தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் ? ரசிகர்களை குழப்பிய அலியா பட் ...!

நிருபர் ஒருவர் அலியா-விடம் "தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் ?" என கேள்வி எழுப்பினார்.

Update: 2022-02-25 11:59 GMT
மும்பை,

பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அலியா பட். இவர் நடித்து  இன்று வெளியாகியுள்ள திரைப்படம்  கங்குபாய். 1960-களில் மும்பையில் பல மாபியா வேலைகளில் ஈடுபட்ட வந்த கங்குபாய் என்பவரின் வாழ்கை வரலாறே இத்திரைப்படம் ஆகும்.

இந்த நிலையில் நேற்று இப்படத்தின் விளம்பரத்திற்காக நிருபர்களை அலியா பட் சந்தித்தார் அப்போது நிருபர் ஒருவர் அவரிடம்  "தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் " என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அலியா பட் " தற்போது ரோகித் சர்மா .ஒட்டுமொத்தமாக விராட் கோலி என பதில் அளித்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகியுள்ளது.

விராட் கோலி  ஓய்வுபெறுவதற்கு முன்பே "ஒட்டுமொத்தமாக விராட் கோலி" என அலியா பட் கூறியதை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்