தயாரித்து இயக்கிய படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன்
நடிகர் ஆர்.மாதவன், ‘ராக்கெட்ரி தி நம்பி எபக்ட்’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் டைரக்டராக உயர்ந்து இருக்கிறார். இந்தப் படத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. நம்ப முடியாத வாழ்வினை வாழ்ந்த அறிவியலாளரின் கதை, இது. படம் வருகிற ஜூலை மாதம் திரைக்கு வர இருக்கிறது. படத்தை பற்றி மாதவன் கூறியதாவது:-
“இந்தப் படத்தில் நடித்திருப்பதுடன். திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளேன். சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனேச்சே ஆகியோருடன் சிம்ரன், ரவி ராகவேந்திரா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யா, ஷாருக்கான் ஆகிய இரண்டு பேரும் சிறப்பு தோற்றங்களில் வருகிறார்கள்.
தேச துரோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் பற்றிய உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் படம், இது. இந்தியாவிலும், பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் படம் வளர்ந்து இருக்கிறது''.