அமீர் இயக்கத்தில் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படம் உருவானது எப்படி?
‘பருத்தி வீரன்’ படத்தை இயக்கிய டைரக்டர் அமீர். இவர், ‘யோகி’ என்ற படத்தை தயாரித்து, கதாநாயகனாக நடித்தார். 9 வருடங்கள் கழித்து அமீர் இயக்கும் புதிய படத்துக்கு, ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்று பெயர் சூட்டியிருக் கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
‘‘இந்த காலகட்டத்தில் ஒரு புதிய தயாரிப்பாளர் படம் செய்வதே கடினம். அதிலும் என்னை மாதிரி இயக்குனரை வைத்து படம் எடுப்பது இன்னும் கடினம். இந்தப் படத்தை பொறுத்தவரை கரு.பழனியப்பன் நடிக் கிறார். இப் போதைக்கு அவர் மட்டும்தான் முடிவாகி இருக் கிறார்.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக காட்டும் பழக்கம் இருக்கிறது. ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை படம் அழுத்தமாகச் சொல்லும்.
திரையுலகுக்கு புதிதாக வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களைத்தான் முன்னிறுத்துகிறார்கள். இது, மோசமான விசயம். அதற்காகவே இந்தப் படத்தை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அடுத்தடுத்து நிறைய படங்கள் செய்ய உள்ளேன்.’’