இளம் நடிகை மரணம்
பிரபல கன்னட இளம் நடிகை ரச்சனா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
பிரபல கன்னட இளம் நடிகை ரச்சனா. பெங்களூருவை சேர்ந்த இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி என்ற கன்னட படத்தில் ரக்சித் ஷெட்டியின் தங்கையாக நடித்து இருந்தார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.
ரச்சனாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரச்சனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. அவருக்கு வயது 39.
இளம் நடிகையான ரச்சனா மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.