கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'வாசி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'வாசி' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2022-02-20 05:14 GMT
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமசுடன் இணைந்து 'வாசி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு ஜி. ராகவ் இயக்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'வாசி' திரைப்படத்தை கீர்த்தி சுரேசின் அக்கா தன்னுடைய ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

சமீபத்தில் டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து வெளியான 'மின்னல் முரளி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்