தமிழக அரசு அறிவிப்பால் அஜித்-சூர்யாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
தமிழக அரசு அறிவிப்பால் அஜித்-சூர்யாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கொரோனா நோய் பரவுவதை தடுக்க கடந்த ஆண்டு (2021) அரசு உத்தரவின் பேரில், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கொரோனா தொற்று பரவுவது குறைந்ததைத் தொடர்ந்து 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அரசு உத்தரவிட்டது.
இதனால் கடந்த பொங்கல் அன்று திரைக்கு வர இருந்த அஜித்குமாரின் ‘வலிமை’ படம் தள்ளிப்போடப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவுவது மேலும் குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது. தமிழ்நாட்டில், பிப்ரவரி 16-ந் தேதி முதல் தியேட்டர்களில், 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் திரையுலகமே மகிழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக பெரிய பட்ஜெட்டில் தயாரான படங்கள் நல்ல லாபம் அடைவதற்கு வாய்ப்புகள் உருவாகி உள்ளன. அரசின் புதிய அறிவிப்பினால் அஜித்குமார், சூர்யா ஆகிய இருவரின் படங்களும் பெரிய அளவில் லாபம் அடைய வாய்ப்புள்ளன.
அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படம் வருகிற 24-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அஜித்குமார், சூர்யா இருவருக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.