ஹன்சிகா நடிக்கும் படத்தை தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி..!

நடிகை ஹன்சிகா நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது.

Update: 2022-02-14 23:09 GMT
சென்னை,

'வாலு', 'ஸ்கெட்ச்', 'சங்கத் தமிழன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார். பிலிம் வொர்க்ஸ் நிறுவனம் என்ற பெயரில் இவர் தயாரிக்கும் அந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.

இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த படத்தின் முதல் காட்சியை கே.எஸ். ரவிகுமார் இயக்க, கலைப்புலி எஸ். தாணு கேமராவை இயக்க, நடிகர் விஜய் சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப்,  ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சபரி கிரீசன், சரவணன் ஆகியோர் இயக்குகிறார்கள். படத்தின் பிற நடிகர்கள் மற்றும் படக்குழு குறித்த விவரம் விரைவில் வெளியாகும்.

மேலும் செய்திகள்