லதா மங்கேஷ்கர் வாழ்க்கை சினிமா படமாகிறது
இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் வாழ்க்கை சினிமா படமாகவும் தயாராக உள்ளது.
புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் 14-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். 5 படங்களுக்கு இசையமைக்கவும் செய்துள்ளார். தமிழில் சத்யா படத்தில் இடம் பெற்ற வளையோசை கலகலவென பாடலையும், ஆனந்த் படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆராரோ பாடலையும் பாடி இருக்கிறார். லதா மங்கேஷ்கர் நினைவாக மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது பிறந்த ஊரான இந்தூரில் அருங்காட்சியகமும், இசைப்பள்ளியும் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் வாழ்க்கை சினிமா படமாகவும் தயாராக உள்ளது.
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பல ஆண்டுகளாகவே அவர் வாழ்க்கை கதையைப் படமாக்க முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா ஆகியோர் தற்போது லதா மங்கேஷ்கர் வாழ்க்கையை படமாக்க முன்வந்துள்ளனர். இதற்காக லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.