சிம்பு தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் இருந்து விஷாலை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சிம்பு தொடர்ந்த மான நஷ்ட வழக்கின் எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து தன்னை நீக்க கோரி நடிகர் விஷால் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2022-02-11 11:34 GMT
கோப்புப்படம்
சென்னை,

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து மைக்கேல் ராயப்பன் தன் மீது அவதூறு செய்தி பரப்பியதாக ஒரு கோடி ரூபாய் கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்திருந்தார். அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக விஷால் இருந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது அரசு தனி அதிகாரிகளை நியமித்துள்ளது. அவர்களின் முடிவின்படிதான் இந்த சங்கங்கள் செயல்பட முடியும். இதன் காரணமாக தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணையின் போது விஷாலை எதிர் மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு சிம்பு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு கோரிய விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் இவ்வழக்கு அடுத்த மாதத்திற்க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்