விஷ்ணு விஷாலின் 'எப்.ஐ.ஆர்' படத்தை வெளியிட தடை..!

விஷ்ணு விஷால் நடித்துள்ள 'எப்.ஐ.ஆர்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-11 00:04 GMT
சென்னை,

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'.  இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் வாசுதேவ் மேனன், நடிகை ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் இன்று (பிப்ரவரி 11) திரையரங்குகளில் வெளியாகுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மலேசியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள ரசிகர்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். 'கிருமி' புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்