1 மில்லியன் பேர் பார்த்து ரசித்த பீஸ்ட் படத்தின் பாடல்!!
நடிகர் விஜய் ரசிகர்கள் இந்த பாடலின் முன்னோட்ட வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘பீஸ்ட்' திரைப்படத்தின் முதல் பாடல், காதலர் தினமான பிப்ரவரி 14ந்தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலின் முன்னோட்ட வீடியோ இன்று வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
நடிகர் விஜய் தொலைபேசி உரையாடல் உடன் வெளியான ‘அலமித்தி ஹபிபோ' என்ற அந்த பாடல் வீடியோவை இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் யூ-ட்யூப்பில் கண்டு ரசித்துள்ளனர். மேலும், நடிகர் விஜய் ரசிகர்கள் இந்த பாடலின் முன்னோட்ட வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.