விவாகரத்துக்கு தயாராகும் நடிகை ஷில்பா ஷெட்டி?

ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற, ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிந்து போகும் எண்ணத்துடனேயே கணவன் - மனைவி இடையே சொத்துகள் பிரிப்பு நடப்பதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Update: 2022-02-07 09:20 GMT
சினிமாத்துறையில் அதிக விவாகரத்துகள் நடக்கின்றன. இந்தி பட உலகில் ஆரம்பித்த இந்த விவாகரத்து கலாசாரம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகம்வரை நீண்டுள்ளது. இந்தி நடிகர் அமீர்கான், நடிகை சமந்தா, நடிகர் தனுஷ் ஆகியோரை தொடர்ந்து தற்போது நடிகை ஷில்பா ஷெட்டியும் கணவர் ராஜ்குந்த்ராவை விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்து இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது. 

ராஜ்குந்த்ரா ஆபாச பட வழக்கில் மாட்டிக்கொண்டு சிறைக்கு சென்ற சமயத்தில் இருவரும் பிரிந்து விடுவார்கள் என வெளியான தகவலை ஷில்பா ஷெட்டி மறுத்தார். ஆனால் இப்போது மீண்டும் அதே விவாகரத்து தகவல் பரவும் நிலையில் அவர் கண்டிக்கவில்லை. ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்து கொள்ள இருக்கிறார் என்று பரவும் தகவலுக்கு காரணம் உள்ளது. 

ராஜ்குந்த்ரா புதிதாக ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளார். இதுதவிர கிணாரா பீச் வியூ வில் உள்ள பண்ணை வீட்டையும் ஷில்பா ஷெட்டி பெயருக்கு மாற்றி இருக்கிறார். பிரிந்து போகும் எண்ணத்துடனேயே கணவன் - மனைவி இடையே சொத்துகள் பிரிப்பு நடப்பதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷில்பா ஷெட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்திருந்தார்

மேலும் செய்திகள்