'பீஸ்ட்' திரைப்படத்தின் புதிய அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு
நடிகர் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், படத்தின் அப்டேட் பற்றி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.