நடிகர் விஜய்-புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்!
நடிகர் விஜய்யுடன் புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி சந்தித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சென்னை,
நடிகர் விஜய்யை, புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி நேற்று சந்தித்து பேசியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அந்த சந்திப்பின் போது, சினிமா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, மரியாதை நிமித்தமான சந்திப்பு என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்திப்பின்போது, இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.