மகனுடன் விக்ரம் இணைந்து நடித்த ‘மகான்', 4 மொழிகளில் வருகிறது

விக்ரம், தனது மகன் துருவ் உடன் இணைந்து நடித்த ‘மகான்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்திருக்கிறார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது:-

Update: 2022-02-04 05:08 GMT
``இது விக்ரமின் 60-வது படம். இந்தப் படம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும். மனதை கவரும் கதைக்களத்தோடு அதிரடி சம்பவங்கள் நிறைந்த ‘மகான்', உலகத்தின் ஒரு பார்வையை கற்றுக் கொடுத்துள்ளது.

நட்பு, போட்டி மற்றும் விதியின் விளையாட்டு ஆகியவை பின்னிப்பிணைந்த ஒரு விறுவிறுப்பான திரைக்கதை இது. லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படம் ஒரு சாதாரண மனிதனையும், அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் சித்தரிக்கிறது. அந்த நிகழ்வுகள் அவனை மட்டும் அல்லாமல், அவனைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றுவதை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

தந்தை-மகன் உறவை கொண்ட விக்ரம் - துருவ் விக்ரம் ஆகிய இருவரும் முதன்முறையாக `மகான்' படத்தில் இணைந்து தோன்று கிறார்கள். அவர்களுடன் முக்கியமான பாத்திரத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் படம் வெளியாகிறது. கன்னடத்தில் இந்தப் படத்துக்கு ‘மகா புருஷா' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

விக்ரம் ரசிகர்களை முழுமையாக திருப்திப் படுத்தும் படமாக ‘மகான்' உருவாகியிருக்கிறது”.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்