'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Update: 2022-02-02 14:25 GMT
சென்னை,

நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படத்தின் டீசர் வெளியாகும் தேதியையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் டீசர் வருகிற 11-ந்தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்