தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் என்ன தெரியுமா...?

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ள திரைப்படத்திற்கு 'வாத்தி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-23 06:01 GMT
சென்னை.

'தோலி பிரேமா' திரைப்படம் மூலம் புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூலம் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'வாத்தி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஒரு சாமானிய மனிதனின் லட்சியப் பயணத்தைப் பற்றி பேச இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறார்.

படத்தின் பிற நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 'வாத்தி' திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

மேலும் செய்திகள்