வலிமை திரைப்படத்தின் 'விசில் தீம் மியூசிக்' வெளியீடு
யுவன் இசையில் வலிமை படத்தின் 'விசில் தீம் மியூசிக்' நேற்று வெளியானது
சென்னை,
நடிகர் அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் வலிமை. கபூர் தயாரிப்பிலான இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் .வலிமை திரைப்படம் 2022 ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று திரையரங்கில் வெளியாகிறது
இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது .இதில் அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் யுவன் இசையில் இந்த திரைப்படத்தின் 'விசில் தீம் மியூசிக்' நேற்று வெளியானது.